அறிவகம்

ஜூலை 2008 லிருந்து வரும் பதிவுகள்

யார் இந்த தீவிரவாதி? (உலகின் அவசரத்தேவை-6)

ஜூலை 29, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

(பெங்களூர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் பற்றி கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளோம். முன்னதாக சர்வதேச தீவிரவாதிகள் பற்றி பார்ப்போம்)

தீவிரவாதிகளும் சர்வதேச பயங்கரவாதிகளும் பெருகியுள்ள தற்போதைய சூழலில் நாட்டின் கௌரவம், பாதுகாப்பு, கருதி அணுஆயுத தயாரிப்பு அவசியமானதாகி விடுகிறது என துணிச்சலோடு சொல்கின்றன அரசுகள். அதற்கு ஏகோபித்த ஆதரவும் தருகின்றனர் நாட்டு மக்கள்.

சரி பேரழிவு ஆயுதங்கள் பெருக இவை தான் உண்மையான காரணங்களா?

தீவிரவாதம், சர்வதேச பயங்கரவாதம் இவை தான் ஒவ்வொரு நாடும் நேரடியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள். தீவிரவாதங்களும் வன்முறைகளும் இல்லாத நாடுகளே இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரியதொரு முட்டுக் கட்டை என்பது உண்மைதான். ஆனால் எப்படி வந்தது இந்த தீவிரவாதம். யார் இந்த தீவிரவாதிகள்?

சுயநாட்டில் தானே துடித்தெழுகிறார்கள் தீவிரவாதிகள்! அடக்குமுறைகளை எதிர்த்து, மதஅநீதிகளை எதிர்த்து, சுரண்டல்களை எதிர்த்து, உணர்ச்சிக்கொடூரங்களை எதிர்த்து மொத்தத்தில் வன்முறைக்கு எதிராக உருவாகும் மற்றொரு வன்முறை தானே தீவிரவாதம்!

என்னடா ஆரம்பத்திலேயே தீவிரவாதத்திற்கு வக்காளத்துவாங்குகிறானே என்று நினைக்காதீர்கள், காலாகாலமாக தோன்றிய ஒவ்வொரு தீவிரவாதத்தின் ஆரம்பத்திற்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அநீதிச் சுரண்டல்களும் தான் மூலகாரணங்களாக இருந்திருக்கின்றன!

தீவிரவாதிகளை மூன்று ரகங்களாக பிரிக்கலாம். 1 நியாயத்துக்காக போராடும் போராளிகள். 2. அரசியல் ரவுடிகளுக்கும் மதபேய்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்கும் வேலைவெட்டியில்லாத உள்ளூர் தாதக்கள். 3. சர்வதேச பயங்கரவாதிகள்.

நியாயத்துக்காக போராடும் போராளிகளை ஒருபோதும் ஆயுதங்களாலும், அடக்குமுறை சட்டங்களாலும் அடக்கிட முடியாது. அணுஆயுதத்தை கொண்டு மட்டுமல்ல, வேறு எந்த ஆயுதத்தை கொண்டும் இத்தகு தீவிவாதிகளை ஒடுக்கிடமுடியாது. இப்படிப்பட்ட தீவிரவாதிகளை மாற்ற ஒரேஒரு வழிதான் உள்ளது. அது சமரசம் சாமாதான பேச்சு, அவனுக்கு நியாயம் கிடைக்கச் செய்யல்.

சரி நியாயமும் தர்மமும் உள்ள போராளிகளை ஒடுக்க அணுஆயுதம்தேவையில்லை தான். ஆனால் போராட்டம் என்ற பெயரில் தனிப்பட்ட நியாயத்துக்காக அப்பாவி பொதுமக்களையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்துவதையும், ஈவு இரக்கமற்ற வன்முறை கொலைகளையும் எப்படி நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியம்? சர்வதேச பயங்கரவாதிகளும், எல்லை தான்டிய தீவிரவாதிகளும், நாட்டின் அமைதியை சீர்குலைத்து, பேரழிவு வன்முறைகளை தூண்டிவிடும் போது ஒட்டுமொத்த நாடே சமரசம் சமாதானம் என அடங்கிப்போக முடியுமா? என்று எதார்த்த எண்ணங்கள் மனதுள் எழுவது நியாயம் தான்.

சர்வதேச பயங்கரவாதிககள், எல்லைதான்டிய தீவிரவாதிகள் இவைகள்தான் அணு ஆயுதங்கள் பெருக முக்கிய காரணங்கள் என்று கூறும் அரசியல்வாதிகளையும், அதற்கு ஆமாம் போடும் நாட்டு மக்களையும் பார்த்து ஒரு கேள்வி
யார் இந்த சர்வதேச பயங்கரவாதி
ஒட்டு மொத்த நாடும்
ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போராடினால்
அதன் பெயர் புரட்சி.

ஒரு நாடு மற்றொரு நாட்டை
பகிரங்கமாக அடக்கினால்
அதன் பெயர் போர்.

ஒர் அமைப்பு வன்முறை ரீதியில்
அரசாங்கத்தை எதிர்த்தால்
அதன்பெயர் தீவிரவாதம்.

பகை நாடுகள் மறைமுகமாக
தீவிரவாதிகளை கொண்டு கலகம் செய்தால்
அதன் பெயர் சர்வதேச பயங்கரவாதம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தில் பகை நாட்டுக்கு எதிரி நமக்கு நண்பன் எனற முடிவோடு, உள்நாட்டில் கொள்கை அளவில் மட்டுமே நிற்கும் சிறுசிறு போராட்ட அமைப்புகளின் தோளோடு தோள்கோர்த்து, பணத்தையும் ஆயுதத்தையும் அத்துனை ஏன் ராணுவத்தையே அனுப்பும் அரசியல்வாதிகள் தானே முதல் பயங்கரவாதிகள்.

அவநம்பிக்கையும் அதிகாரஅத்துமீரல் குணமும் கொண்ட அரசியல்வாதிகளின் வளர்ப்பு பிள்ளைகள் தானே இந்த சர்வதேச பயங்கரவாதிகள்.

சின்ன சின்ன போராட்ட அமைப்புகளுக்கு மதம், இனம், மொழி, எல்லை என்ற எதோ ஒரு போர்வையை போர்த்தி விட்டு, அதிகார அத்துமீரல்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், முக்கியமாக பொருளாதார சுரண்டல்களை சாதித்துக்கொள்ள சர்வதேச அரசியல்வாதிகள் ஏற்படுத்தி கொண்ட மறைமுக அமைப்புதானே இந்த சர்வதேச பயங்கரவாதம்.

எந்த ஒரு மனித மனதிற்குள்ளும் புனிதப்போர், தர்மயுத்தம் என்ற நியாயங்கள் திணிக்கப் பட்டுவிட்டால் தொலைநோக்கு பார்வையற்ற அந்த மனங்களுக்கு, தன்உயிரோ, மற்றவர்கள் உயிரோ, மனசாட்சியோ, நியாய தர்மமோ முக்கியமாக தெரியாது. மாறாக புனிதப்போரும், தர்மயுத்தமும் தான் முக்கியம். என்ற அர்த்தமற்ற போலி நியாயத்தில் தான் சாகும் வரை போராடிக்கொண்டிருக்கும்.

அரசியலை குற்றம் சுமத்தி அதே நேரத்தில் திவிரவாத வன்முறைகளை நியாயம் என்று சொல்லவில்லை. ஒரு அமைப்பு தன் தனிப்பட்ட எதிரிகளை அழிக்க, தன் தனிப்பட்ட கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வன்முறையை கையாண்டு, அப்பாவி பொது மக்களையும் பொது சொத்துக்களையும் சேதப்படுத்துகிறது என்றால் நிச்சயமாக அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் தீவிரவாதிகளை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிவிட்டு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளியேமட்டும் சமாதானம் பேசி, உள்ளுக்குள் கோரா அழிவு எண்ணங்கள் கொண்ட மதக்கொள்ளையர்களும், அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகளுமே முதலில் ஒழிக்கப்படவேண்டிய பயங்கரவாதிகள்.

தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு குழந்தையையும் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளின் சுயநலபோக அக்கிரமங்கள் தான் இன்றைய அத்துனை பேரழிவு ஆயுதப்பெருக்கத்திற்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.

தான் தான் உலகின் ராஜா. தனக்கு கீழ்தான் உலகம் என்ற அகந்தை கொண்ட சர்வதேச அரசியல் வாதிகள் இருக்கும் வரை தீவிரவாதிகளும் இருப்பார்கள்., பேரழிவு ஆயுதங்களும் இருக்கும். இவர்களை அடியோடு களைஎடுக்க மக்கள் முயன்றாலே போதும் உலகம் அமைதியாகிவிடும்.

(இந்த கட்டுரை தொடருக்கு சம்மந்தமில்லை என்றாலும் பெங்களூர் அகமதாபாத் குண்டுவெடிப்புகள் பற்றி குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயம்)
பெங்களூரில் குண்டு வெடித்தது. வெடித்த நிமிடம் முதல் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு, பரிசோதனை. ஆனாலும் அடுத்த நாள் அகமதாபாத்தில் குணடு வெடிக்கிறது. அப்படியானால் காவல்துறையின் பாதுகாப்பும் பரிசோதனையும்?… காவல்துறை என்ன செய்யமுடியும், அதற்கு மேலே ஒரு அதிகாரவர்க்கம்(அரசியல், மதம், பணம்) இருக்கிறதே. குறிப்பிட்ட சிலர் நாட்டையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோழைகளா?

அரசியல்வாதி அவனது அரசியல் காழ்புணர்ச்சியை சாதிக்க துடிக்கிறான், மதவாதி என்னவென்று சொல்வது மதம்பிடித்து அலைகிறான். ஆண்டுக்கு நாலுமுறையாவது மதம்பிடித்து ஆடினால் தானே அவனுக்கும் ஏதோ வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரும். குண்டு வைக்க சொன்னது மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தில் ஏதோ ஒரு வர்க்கம். குண்டு வைத்தது?.. பணத்துக்காக நம்மில் இருந்து விலைபோன ஒருசில பரதேசிகள்.
அரசியல்வாதிகளே! காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள் உங்கள் எதிரிகளிடம் நேரடியாக, மதப்பேய்களே! மதம்பிடித்து ஆடிக்கொள்ளுங்கள் உங்களுக்குள்ளேயே, பணத்துக்காக குண்டை சுமக்கும் சைக்கோக்களே! பணத்துக்கு விலை அப்பாவிகளின் உயிர் அல்ல.

அடுத்த பதிப்பில் ( யார் இந்த சுயநல அரசியல்வாதிகள், இயேசுவும், நபிகளும், கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)
தொடர்புக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?(உலகின் அவசரத்தேவை-5)

ஜூலை 25, 2008 · 1 மறுமொழி

(இந்த பதிவு முதல் சூடனான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விவாதங்களுக்குள் நுழையலாம் என்றிருந்தோம். ஆனால் டாக்டர். அப்துல் கலாமிடம் ஒருகேள்வி பதிப்புக்கு பின்னர் அணுவியல் துறை உட்பட பலத்துறை வல்லுனர்களும் அறிவகத்துககு பல கேள்விகளை அனுப்பியிருந்தனர். கேள்வி – பதில்களை அனைவருக்கும் தர கடமைப்பட்டுள்ளோம்.)

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம்?
·
1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
· பல்வேறு அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தக்களுக்கு பிறகும் உலக நாடுகளிடம் ஏறத்தாழ 27,000 ரக அணு ஆயுதங்கள் தற்போதும் உள்ளன. இவற்றை பல நாடுகளும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளன.( ஒப்புகொண்டது மட்டும் இவ்வளவு! மறைக்கப்பட்டுள்ளது எவ்வளவோ?)
· அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் 10,104 அணுகுண்டுகள் ரஷியா -16,000, பிரான்ஸ் -350, இங்கிலாந்து -200, சீனா- 200. என பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மொத்தம் 110 க்கும் மேற்பட்ட அணு குண்டுகள் இருக்கலாம் என சர்வதேச அணுஆயுத ஒழிப்பு குழு கணித்துள்ளது.
· 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை.(கொடுமையிலும் கொடுமை)
· 1972-ல் பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பதற்காகவே சர்வதேச உயரியல் ஆயுதங்கள் ஓழிப்பு மாநாடு நடந்தது.
· 1972 மாநாட்டு விதி முறைகளை மீறாத செயல் என கூறி அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் நோய்கிருமி ஆயுதங்களுக்கு எதிரான மருந்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் இன்றளவும் பேரழிவு நோய்கிருமி ஆயுதங்களை வைத்துள்ளன.
· 1990ல் ஈராக்கில் 5 ஆராய்ச்சி சாலைகளில் மறைத்து வைக்கப்பட்ட அந்த்ராக்ஸ், போடுலிஸம், கெங்ரேன் பாக்டிரியா போன்ற பேரழிவு கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
· இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் நாடு, சீனாவுக்கு எதிராக கிருமிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தியது.
· வியட்நாம் போரின்போது ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்ற ஒருவகை இரசாயன ஆயுதத்தை அமேரிககா பயன்படுத்தியது.

இயக்கை சீற்றங்களால் அணுஆயுத விளைவுகள் வராதா?
· ரஷ்யாவின் செர்நோபில் அணுஉலை 1988ல் வெடித்தது. அதில் வெளியாகிய கதிர்வீச்சு பல்லாயிரம் கி.மீ கடந்து பல நாடுகளிலும் ஆபத்தை விளைவித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது
· சமீபத்தில் 2007 ஜூலை 16ல். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது, கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் கலந்தது.
· போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலில் ஆயிரக்கணக்காணர் மாண்டனர்!
· இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற கியூரி தம்பதியினரும் செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது மகள் ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி Leukemia நோயில் முதன் முதல் கதிரியக்கத்திற்கு பலியானர்கள்!
· ஒவ்வொரு அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார். கதிர்விச்சின் பாதிப்பு கணக்கிலடங்காதது.
· பல நாடுகளும் பாதுகாப்பு, கௌரவம் கருதி அணுஉலை வெடிப்புகளை வெளியில் சொல்வதில்லை.

பெருமளவில் மாசு எதனால் நிகழ்கிறது?
· அமேரிக்கா உட்பட 5 அணுஆயுத நாடுகள் இதுவரை வான்வெளி நடத்திய 528 அணுகுண்டு சோதனையால் பல லட்சம் மெகா டன் கார்பன்14 மாசு வாயுவில் கலந்துள்ளது. 545 மெகா டன் வெடிப்பு திறனால் எற்பட்ட கதிர்வீச்சால் இன்றும் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
· அணுஆயுத கழிவுகள் எற்படுத்தும் மாசுவுக்கு கணக்கே இல்லை. 10ஆண்டுகள் மனிதன் இயற்கையில் ஏற்படுத்தும் மாசுவை விட ஒரு அணுஆயத சோதனையினால் ஏற்படும் மாசு அதிகம்.( அணுசோதனைகளால் வளிமண்டல மாசு மட்டுமல்ல நீர், நிலம், உணவு, மனிதஉடல் என அனைத்திலும் மாசு ஏற்படுகிறது)
· நோய்கிருமி, விஷவாயு ஆயுதங்களுக்கு மாற்று மருந்துகளே கிடையாது. எல்லோரும் கவசம் அணிந்து சுற்ற வேண்டியது தான். உணவு தாவரங்கள், விலங்குகளுக்கு கூட கவசம் அணியும் கட்டாயம் ஏற்படும் காலம் வெகுதூரமில்லை.

அணுஆயுதங்களை வைத்துக்கொண்டு வறுமையை ஒழிக்க முடியுமா?
· அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது
· அணுஆயுத கழிவுகளை பாதுகாப்பாக புதைக்க செலவிடும் தொகை கணக்கிலடங்கா? இந்தியா போன்ற நாடுகள் இதில் இன்றளவும் வெளிப்படையை கையாளவில்லை.
· ஒவ்வொரு நாடும் அணுஆயுத தயாரிப்புக்கும், ராணுவ தளவாடங்களுக்கும் செலவிடும் தொகை அடிப்படை கல்விக்கு செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

அணுஆயுதங்களை ஒழிக்க முயற்சிகள் நடக்கிறதா?
· அணுஆயுத ஒழிப்பு முயற்சிகளில் இன்றளவும் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகள் பித்தலாட்டமே செய்து விருகின்றன. முழுமையான அணுஆயுது ஒழிப்பு மசோதாவை இன்றுவரை அமேரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியதில்லை.
· 1972 உயிர்கொல்லி ஆயுத ஒழிப்பு மாநாட்டு திட்டங்களுக்கு எந்த நாடும் முழுமையாக கட்டுபட்டு கையெழுத்திட்டதில்லை.
· இன்று கூட அணுஅயுத சோதனைகள் உலகில் தடையின்றி தொடந்துகொண்டுதான் இருக்கிறன.
· வல்லரசு நாடுகளில் சில நாடுகள் தீவிரவாதிகளிடம் அணுஆயுதங்களை கொடுத்து மறைமுக சோதனைகளை சாதித்துக்கொள்கின்றன என்பது ஜீரணிக்கமுடியாத உண்மையாக உள்ளது.

ஆணுஆயுதங்களை ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியுமா?
· அணுஆயுதங்களை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது. இதுவரை உருவாக்கிவைத்துள்ள ஆயுதங்களை அழிக்க நினைத்தாலும் பல மெகா டன் மாசு வெளியில் கலக்கும் என்ற உண்மையை கடவுளை வேண்டிக்கொண்டு ஜீரணித்துதான் ஆகவேண்டும்.
· அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாமே ஒழிய பேரழிவு ஆயுதங்களாக தயாரிக்கப்படும் அணுசக்தியை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது என்பதை எல்லோரும் எதார்த்தமாக புரிந்துகொள்ள ஏன் தான் மறுக்கிறார்களோ இறைவா?
· இங்கு குறிப்பிடபட்டுள்ள ஆதாரங்கள் மிகமிக குறைவானவையே. அணுகதிர்வீச்சு, பேரழிவு நோய்கிருமிகளின் தாக்கம், அணுகழிவுகளின் பாதுகாப்பற்ற புதைப்பு இவற்றை பற்றி எழுதினால் பக்கங்கள் பத்தாது. அதைபடித்து ஜீரணிக்க நமது மென்மையான மனசுகளும் தாங்காது. அந்தளவுக்கு கொடுமையானது.(உலக அரசியல் தலைவர்களே, அறிவியல் அறிஞர்களே தயவுகூர்ந்து உலகின்பால் இரக்கம்காட்டுங்கள்.)

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?
· இந்த கட்டுரைக்கு நேரடி சம்மந்தமில்லாதது என்றாலும் தற்போதைய பரபரப்பு செய்தி என்பதால் பலரும் இந்த கேள்வியை தான் கேட்டிருந்தனர்.

உலகில் யுரேனியம் கிடைக்கும் நாடுகளில் கடைசி இடத்தில் இருக்கும் அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதை காட்டிலும், அணுஆயுதங்கள் அற்ற நாடுகள் என்ற கூட்டுகுழுவில் இந்தியா இணைந்து கொள்ளலாமே. மேலும் அணுசக்திகழிவுகள் குறித்து இன்னும் வெளிப்படையாக நடந்து கொள்ளாத இந்தியா, மேற்கொண்டு அணுசக்தி உற்பத்தி குறித்து பேசுவதே அர்த்தமற்றது. இந்தியாவின் பலமும் எதிர்காலமும் விவசாயத்திலும் மனிதவளத்திலும் தானே தவிர அணுசக்தியில் இல்லை. (மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அறிவகத்துககு தெரியப்படுத்தவும் அடுத்த பதிப்பில் விரிவாக விவாதிக்கலாம்)

ஐ.நா சபையே முயன்றும் 50 ஆண்டுகளாக முடியாத பேரழிவு ஆயுத ஒழிப்பை சாமானியர்கள் நாம் விவாதித்து தீர்த்துவிட முடியுமா?
· பல நல்லெண்ணவாதிகள், எதார்த்தவாதிகள் கேட்ட இந்த கேள்விக்கு அறிவகம் தலைவணங்குகிறது.
· நம்மால் முடியும். தற்போதுள்ள உலக மானுடவியல் பிரட்சனைகளை அறிவகம் இரண்டாக பிரித்துள்ளது. 1. உலகின் அவசரத்தேவை, 2. உலகின் அடிப்படை தேவை. அடிப்படை தேவை குறித்து இனிவரும் பதிப்புகளில் ஆலோசிக்கப்போகிறோம். இந்த கட்டுரைகளின் முடிவில் அவசரம், அடிப்டை தேவைகளை உடனடியாக சாத்தியப்படுத்திக்கொள்ள எளிமையான, நடைமுறைக்கு உகந்த தீர்வுகள் சொல்லப்படுகிறது. தொடந்து ஆலோசனைகளை தருவதன் மூலம் நீங்களும் இந்த ஒப்பற்ற பணியில் இணைந்து கொள்ளுங்கள்.
· தொடர்புக்கு… arivakam@gmail.com ( அறிவகத்தில் பதிப்புகள் வெளியிடல் விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிவகத்துக்கு தெரியப்படுத்தவும்).
அடுத்த பதிப்பில் … (யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)

பகுப்புகள்: Uncategorized

டாக்டர். அப்துல்கலாமிடம் ஒருகேள்வி(அவரின் பதிலுடன்) -உலகின் அவசரத்தேவை-4

ஜூலை 21, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என அழைக்கும் டாக்டர். அப்துல்கலாம் அவர்களே, கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளங்களின் கனவுகளுக்கு என்ன உத்திரவாதம்? உலகே பேரழிவு கிடங்காகிக் கொண்டிருக்கும் போது கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் என்ன உத்திரவாதம் உள்ளது.

  பேரழிவு ஆயுதங்கள் நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. அது இப்போதைக்கு யாரையும் பாதிக்காது. எனவே பிஞ்சுகளே கனவு காணுங்கள், மாணவர்களே கனவுகாணுங்கள், இளைஞர்களே கனவுகாணுங்கள், உங்கள் கனவுகள் நிஜங்களாகட்டும், இலட்சியங்கள் வெல்லட்டும். சாதனைகள் குவியட்டும். ஆனால் எவ்வளவு நாள்! உங்கள் இன்பக் கனவுகளும் இலட்சிய வெற்றிகளும் எவ்வளவு நாள்?

   அணு ஆயுதங்கள் கைகட்டி காத்திருக்கும் காலம் மட்டும் தானே. சிந்தித்துபாருங்கள் உங்கள் இலட்சியங்களின் ஆயுள் எவ்வளவு நாள்?

    உலகளாவிய இலட்சியவாதிகளே!

    பலகோடி நூற்றாண்டு வெல்லப் போவதுவா உங்கள் லட்சியங்கள், அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அணுஆயுதப் போருக்கு இறையாகி அழிந்து போவதுவா? அணுஆயுதப்போர் வந்துவிட்டால் செயற்கைகோள் இருந்து என்ன பயன், கணிணி, இணையம், செல்பேசி, விமானம், என எதுதான் இருந்து என்ன பயன்? இன்னும் இன்னும் பல புதுமைகள் படைக்க முயன்றுகொண்டிருக்கும் உங்களின் இலட்சிய கனவுகள் இருந்து தான் என்ன பயன்? கொடூர அணுஆயுதப்போர் இந்த ஆண்டே வராது என்பது எவ்வளவு நிச்சயம்?

      பல்லாண்டுகள் சந்ததி சந்ததியாய் வாழத்துடிக்கும் இலட்சியவாதிகளே நீங்கள் வாழ்ந்தாக வேண்டாமா? நீங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் உங்கள் சந்ததிகள் வாழ வேண்டாமா? உங்கள் கனவுகளும் லட்சியங்களும் இந்தபூமியில் தொடர்ந்து வலம் வர வேண்டாமா?

    ஆம்! என்பதுதான் உங்கள் பதிலானால்; உங்களுடைய என்னுடைய இன்னும் உலகில் உள்ள  ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கனவுகளுக்கும் லட்சிய வெற்றிகளுக்குமான முதல் பொதுத் தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு. பேரழிவுஆயுதங்கள் ஒழிக்கப்படா விட்டால் உங்கள் எந்த கனவுகளுக்கும் உத்திரவாதம் இல்லை. 21ம் நூற்றாண்டில் அடி எடுத்துவைத்துள்ள  ஒவ்வொரு  மனிதனும் செய்தாகவேண்டிய முதல் அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஓழிப்பு.

    கனவு காணும் பிஞ்சுகளே  இலட்சியம் தேடும் இளைஞர்களே  உயிர்வாழ துடிக்கும் உலக எதார்த்தவாதிகளே

      அழிவு விளிம்பிலுள்ள இந்த உலகிற்கு அவசரத்தேவை இறைவனல்ல, மதங்களல்ல, இண்டர்நெட் விரிவு அல்ல, செவ்வாய் கிரக நீர் அல்ல, கிரிக்கெட்டும் கால்பந்தும் அல்ல. இந்த உலகின் மிகமிக மிக அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு .

   உண்மையை கொஞ்சம் எதார்த்தமாக புறிந்து கொள்ளுங்கள்.

   இந்த கட்டுரை குறித்து கலாம் அவர்கள் அறிவகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே இங்கு தருகிறோம்.

   Having an aim in life is the prerogative of the individual. Aim leads to thinking, acquiring knowledge, hard work and canapcity to persevere. That is how I have explained DREAM by the youth on many occasion. In the last 50 years, nulcear disarmament has been the subject of many international forum. Nuclear war will be a foolish war and it may never happen. Young people should be busy in many of their very important areas of improving their life and contributing to the improvement of the life of the society as a whole. Most important thing for India today is removal of the poverty of 220 million people, enhancing the literacy to near 100%, providing quality healthcare to reach every citizen, and above all, providing opportunity for every citizen to lead a life with dignity. Regaring the world, pressing problem is evolution of clean green planet earth, because every year 30 billion tones of carbon dioxide is being pumped into the atmosphere. We need a clear energy, hence I have proposed energy independence comibination of three sources – renewable energy like Solar and wind Power, Nuclear Power and biofuel.

Greetings and best wishes

Kalam (20.07.2008).

     வாழ்வில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டிருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. லட்சியம் ஒருவரைச் சிந்திக்க வைத்து, அறிவைத் திரட்டச் செய்து, கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கு வழிவகுக்கிறது. இளைஞர்களின் கனவைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் நான் அப்படித்தான் விளக்கி யிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் அணுஆயுத ஒழிப்பு என்பது தான் உலக அரங்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. அணுஆயுத போர் என்பது மூடத்தனமான போர். அது ஒருபோதும் வரப்போவதில்லை.

   இளைஞர்கள் தங்கள் குறிக்கோளில் முழுமையாக ஈடுபட்டுத் தங்கள் சுய முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும். இன்று இந்தியாவில் 22 கோடி மக்களின் வறுமையைப் போக்க வேண்டும். கல்வி அறிவு 100 சதவீதமாக பெருக்கப்பட வேண்டும். அடிப்படை சுகாதாரம் ஒவ்வொருவரையும் அடைய வழி செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மனித மதிப்புடன் ஒவ்வொரு குடிமகனும் வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

   தற்போது உலகின் அத்தியாவிசய தேவை மாசற்ற பசுமையான சூழ்நிலை அமைப்பு. ஏனெனில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் கோடி டன் கார்பன் டையாக்ஸைடு வாயு, சூழ்வெளியில் திணிக்கப்படுகிறது! நமக்குச் சுத்தமான எரிசக்தி தேவை. ஆகவே நான் மூன்றுவித தனித்துவக் கூட்டு மூலாதார எரிசக்திகளைசூரிய சக்தி, காற்றுச் சக்தி, அணுக்கருச் சக்தி, உயிரின எச்சப் பொருள் சக்தி போன்ற புதிப்பிக்கதக்க எரிசக்திகளைஎடுத்துக் கூறியிருக்கிறேன்.

நல் வாழ்த்துக்களுடன், நல் விருப்புக்களுடன்,

கலாம்.(20.07.2008).

 

   டாக்டர் கலாம் அவர்கள் குறிப்பிடுவது போல பூமி வெப்பமடைகிறது, மாசு அடைகிறது என்பது உண்மை தான். அதே போல வறுமையின்மை, சுகாதாரம், கல்வி இவைகளும் மிகமிக அத்தியாவிசயமான தேவைகள் தான். இவைகளை நிவர்த்தி செய்துகொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்து தானே. இந்த 50 ஆண்டுகாலமாக அணுஆயுத ஒழிப்பு உலக அரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளதே தவிர ஒழிக்கப்படவில்லை. மாறக பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. நாங்கள் இங்கு ஆணுஆயுதங்களை மட்டும் குறிப்பிடவில்லை. உயிர்கொல்லி ஆயுதங்கள்(Bio weapons) போன்ற பேரழிவு ஆயுதங்களையும் தான். இவை இன்று உலகில் இல்லை என மறுக்கமுடியுமா? போர் வராது என்றால் இவையெல்லாம் எதற்காக காத்திருக்கின்றன. இவைகள் தீவிரவாதிகளின் கைக்கு போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? பாதுகாப்புக்கு உகந்ததல்லாத இந்த பேரழிவுஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கபட வேண்டும், வறுமையின்மை, கல்வி, சுகாதாரம், மாசாற்ற பூமி இவைகளை உடனடியாக சாத்தியப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆய்ந்து செயல்படுத்தும் தொலைநோக்கு முயற்சி தான் அறிவகம். இதில் நீங்களும் பங்கேற்கலாம். ஆலோசனைகளை தாருவது தான் உங்கள் உயரிய பங்களிப்பு. உங்களுக்கென ஒரு தனிப்பட்ட லட்சியம் இருக்கும். அதில் நீங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். அதே போல உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்களோடு இந்த உலகின் அவசரத்தேவையையும் ஒரு பொது லட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது தாழ்மையான வேண்டுகோளாக மார்ட்டீன் லூதர்கிங்கின் ஆதங்கத்தையே மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன

  எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுக்கோப்பாக ஒன்றுசேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர் அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?) - மார்ட்டின் லூதர்கிங்.

 அடுத்த பதிப்பில் (யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)

 

தொடர்புக்குarivakam@gmail.com,  www.arivakam.wordpress.com,  www.tamilarivu.blogspot.com

பகுப்புகள்: Uncategorized

இயேசுவும் அல்லாவும் ராமரும் காப்பாற்றுவார்களா?(உலகின் அவசரத்தேவை-3)

ஜூலை 19, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

அணுஆயுதங்களை போருக்கு பயன்படுத்தமாட்டார்கள், அது பயமுறுத்தலுக்கும் பாதுகாப்பிற்கும் மட்டுமே; என நினைத்துக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை! அணுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் மட்டுமே பற்றிவெடிக்கும் பட்டாசுகள் அல்ல, பற்றவைக்காமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க. இயல்பிலேயே வெப்பமாற்றங்களால் பாதிக்கப்படும் ஒரு அபாயகர அமைப்புதான் அணுஆயுதம். யாரும் உபயோகிக்க தேவையில்லை, அணுஆயுத கிடங்கில் ஏதெனும் ரசாயனமாற்றங்கள் நிகழ்ந்தாலோ, அல்லது கிடங்கு அருகே சிறிய நிலஅதிர்ச்சி வந்தலோ£ போதும் அணுஆயுத கிடங்கோடு பல்லயிரம் கீ.மீ நிலப்பரப்பும் வெடித்து சிதறி சாம்பலாகிவிடும்.

போர் என்றால் எல்லைகோட்டில் இராணுவங்கள் மட்டுமே மோதிக்கொள்ளும், நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு பொருளுதவி மட்டும் செய்தால் போதும்; என்ற போலி நம்பிக்கையில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளே; அணு ஆயுதப்போர் என்பது எல்லையில் ராணுவங்கள் மட்டும் மோதிக்கொள்ளும் போர்அல்ல. நாம் பாதுகாப்பாக நம்வீட்டு தொலைகாட்சி முன் அமர்ந்து கொண்டு வெற்றி தோல்விகளை ரசித்துக் கொண்டிருக்க. எதிரி எங்கு எவ்வித தாக்கதல் நடத்தப்போகிறான், நாம் எந்த வகை எதிர்தாக்குதல் நடத்தப் போகிறோம், எப்படி தற்காத்துக் கொள்ளப் போகிறோம்? என்பவை ராணவத்திற்கே கடைசி நிமிடம்வரை கேள்விக்குறிதான். அந்தளவுக்கு விதவிதமான ஆயுதங்கள் நாட்டுக்கு நாடு மறைக்கப் பட்டுள்ளது. அதீதமாக சொன்னால் சுய ஆயுதங்களை கையாளவே திண்டாடும் நிலையில்தான் இன்றைய ராணுவங்களும் உள்ளன. ராணுவத்திற்கே தற்காப்பு கேள்விக் குறியாக இருக்கும்போது பொதுமக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்?

பேரழிவுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் பற்றிக்கொள்ளும் பட்டாசுகள், அதுபட்ட இடத்தில் மட்டுமே தீ பற்றி எரியும், எப்படியும் தற்காத்துக்கொள்ளலாம் என இன்றுவரை நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்காக மட்டும் இரண்டே உதாரணங்கள்:-

வாக்கும்பாம்ஸ் என்றொருவகை ஆயுதம். இதை காற்றில் தூவவிட்டால் போதும் காற்று பரவும் திசையெங்கும் விஷம் பரவும். நீர்நிலைகள், உணவு தாவரங்கள் அனைத்திலும் விஷம்கலக்கும். விஷக்காற்றை நூகர்ந்த புல், பூண்டு முதல் விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் மூச்சு திணறி சாகும்.

அடுத்து உயிர்கொல்லி கதிர்வீச்சு ஆயுதங்கள்: காற்றில் நீரில் உயிர்கொல்லி நோய்க் கிருமிகள் பரப்பப்பட்டால் ஒவ்வொரு மனிதனும் நோய்தொற்றி அல்லோலப்படுவான். உயர்கொல்லி கதிர்வீச்சால் உடலெங்கும் உஷ்ணம் பெறுத்து ரத்தகுழாய்கள் வெடிக்கும். உடலில் கொப்பளங்களும், சீலும், நீறும் வடியும், துர்நாற்றம் வீசும், சதைஅழுகிதொங்கும், கணத்துக்குகணம் அணு அணுவாய் துடித்து துடித்து சாவோம். நரம்புமண்டல கதிர்வீச்சு ஆயுதங்களால் பார்வை பறிபோகும், மூளை செயல் இழக்கும், உடலில் இரத்த ஓட்டம் உறைந்து குஷ்டமும் இயலாமையும் நிலவி, இறுதியில் கோமா நிலைக்கு தள்ளப் படுவோம். இது மரணத்தை விட கொடுமையானது.

இதெல்லாம் தெரிந்த பாதிப்புகள். தெரியாத பாதிப்புகள் எத்தனையோ! அணுஆயுதங்களின் கோரம் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரமக்களுக்கு தெரியும். லட்சக்கணக்கானோர் மாண்டது ஒருபுறம்., ஆனால் அணுஆயுத கோரத்தில் அடிபட்டு மீண்டவர்கள், ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் நரக வேதனையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகட்ட அணுகுண்டானதே அந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கம் போது, இன்றைய நவீன அணுஆயுதங்களின் விளைவு எந்தளவுக்கு இருக்கும் என நீங்களே யூகித்துப் பாருங்கள்.

அரசியல் வீம்பு, அதிகார அத்துமீரல், தீவிரவாதம், என எல்லாம் சேர்ந்து அணுஆயுதப்போர் வருகிறது. நாட்டுக்கு நாடு வானின்று குண்டுமழை பொழிகின்றன. குண்டுகள் விழுந்த இடமெல்லாம் நிலம் வெடித்துச் சிதறுகிறது. எங்கும் நிலஅதிர்ச்சி, அனல்காற்று, உலகே தீயில் பற்றி எரிகிறது. எங்கும் புகை, வெடிப்பு, கொந்தளிப்பு., வெடிப்புத்தீயில் சிக்கிய மனிதர்கள், விலங்குகள் கைசிதறி, கால் சிதறி, தலை சிதறி கொத்துக்கொத்தாய் தூக்கி எரியப்படுகின்றனர். சுவாசிக்க திணறி ஒவ்வொரு உயிரும் துடிதுடிக்கிறது. மரணக்கூக்குரல்களும் அணுபிளவு சத்தங்களும் ஒன்றைஒன்று மிஞ்சிக்கேட்கின்றன. பிஞ்சுகுழந்தைகள், செல்லப் பிராணிகள், தீயில் கருகும் தருணம், எங்கும் ரத்தம் ஆராய்ஓடும் கோரம். யார்? யாரை காப்பாற்ற முடியும்? வரண்டு தாகம்தாகம் என துடிக்கும் நாவுகளுக்கு ரத்த ஆறு தீர்வாகுமா?

இன்னும் ஆழமாகவே அந்த கோரத்தை கண்முன் நிறுத்திப்பாருங்கள்

இயற்கைசீற்றங்களில் இருந்துதான் இறைவன் காப்பார் எனநம்பியிருக்கலாம். ஆனால் அணுஆயுத தீயினின்று நம்மை காக்க எந்த சக்தி உள்ளது. நாம்பெற்ற நம் செல்லக் குழந்தைகள், நம்மை பெற்ற பெற்றோர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர், நம் குடும்பம், நம் காதல், கூடவே நாமும் தீயில் எரியும் அந்த ரணகளத்தில், சுண்டிப்போன நம் நாவுகள் எதை சொல்லி துடிக்கும்? யாரை கூவி அழைக்கும்? ‘‘ஆண்டவனே, ஐயப்பா, முருகா, இயேசுவே, அல்லா, ராமா, கருமாயி, மகமாயி, ஈஸ்வரா, யார்? யார்? யார்நம்மை காப்பாற்றுவார்கள்? யாரால் நம்மைகாப்பாற்ற முடியும்?

அப்படியே இறைவன்தோன்றி காப்பதாக கருதினாலும் அநத தருணத்தில் அரேபிய நாட்டில் சிவபெருமானும், இந்துத்துவ நாட்டில் இயேசுவும், கிறிஸ்துவநாட்டில் அல்லாவும் தோன்றினால் என்னபயன்? யார் யாரை காப்பாற்றுவார்? இதற்கு மத அமைப்புகளால் என்ன பதில் சொல்லமுடியும்?, மத கலவரத்தால் தான் போர் மூண்டிருக்கும் பட்சத்தில் மத அமைப்பாளர்கலால் பதில் சொல்லமுடியுமா? அல்லது அந்த கடவுள்களால் தான் பதில் சொல்ல முடியுமா? உங்களுக்குள்ளேயே விடைதேடிப்பாருங்கள்…

கும்பகோணத்தில் கொடூர தீயில் கருகிய கள்ளம் கபடமில்லாத பிஞ்சுகளை எந்த கடவுள் காப்பாற்றினார்? மனசாட்சியைத் தொட்டு உங்களுக்குள்ளேயே பதில் சொல்லிக்கொள்ளுங்கள்.

தொடர்ச்சி… அடுத்த பதிப்பில் (முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி.)

பகுப்புகள்: Uncategorized

பூமி வெடித்து சிதறிவிடும் (உலகின் அவசரத் தேவை – 2)…

ஜூலை 16, 2008 · 2 மறுமொழிகள்

 பேரழிவு ஆயுதங்களின் விளைவுகளைப்பற்றி விவரிக்க தேவையில்லை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடந்த இரண்டு உலக போர்களில் பாதி உலகே நாசம் அடைந்தது என்றால், ஆணுஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகின் நிலையை கொஞ்சம் எதார்த்தமாக சிந்தித்துபாருங்கள்.

இந்த கணம் அணுஆயுதப்போர் வந்தாலும் அடுத்த 2 மணிநேரத்தில் பூமி வெடித்துச் சிதறி கருகி சாம்பலாகிவிடும். ஒரு ஈ, எரும்பு கூட மிஞ்சாது.

ஒரு மீச்சிறு ஆணுகுண்டானதே கண்ணிமைக்கும் நேரத்தில் பலகோடி மக்களை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றது என்றால், இன்று உலக வல்லரசுகளிடம் மட்டும் 80,000 ரகத்திற்கும் மேற்பட்ட பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இந்த 80,000 ரக பேரழிவு ஆயதங்களும் ஆழிவு பாதையை துவங்குமானால் நாம் வாழும் பூமி தாங்குமா? நிலம் சற்று அசைந்தாலே நிலநடுக்கம், பூகம்பம் என பேரழிவு நிகழும்போது பூமியே வெடித்து சிதறினால் மிஞ்சுவது யார்?

என் அறிவுக்கு எட்டியமட்டும் இன்று உலக வல்லரசுகளிடம் இரசாயன குண்டுகள், ஜலவாயு குண்டுகள், கிருமிநாசினி குண்டுகள், நியூட்ரான் குண்டுகள், ஆக்சிஜன் உறுஞ்சு குண்டுகள், நாபாம் குண்டுகள், வாக்கும் குண்டுகள், எண்ணை காற்று வெடிகள், நிலத்தடி தாக்குதல் ஏவுகனைகள், விண்வெளி தாக்குதல் ஏவுகணைகள், பேரழிவு நோய்கிருமி ஏவுகணைகள், விசவாயு ஏவுகனைகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், கதிர்வீச்சு ஆயுதங்கள், கண்ணி வெடிகள், அபாயகர அணுகுண்டுகள்; இதுமட்டுமல்லாது இதனிலும் மேலான சக்தி வாய்ந்த கொடூர ஆயுதங்கள் உலக வல்லரசுகளிடம் மறைக்கப்பட்டுள்ளதாம். இத்தனை குண்டு களும் ஏவுகணைகளும் எதற்காக காத்திருக்கின்றன. உலகை காப்பாற்றி மேம்படுத்திக் கொள்ளவா? அல்லது அழித்து சாம்பலாக்கிக் கொள்ளவா?

கொடூரர்களின் கண்டுபிடிப்பை பார்த்தீர்களா?
விஷவாயு குண்டுகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், ஆக்சிஜன் உருஞ்சு குண்டுகள், பேரழிவு நோய்கிருமிகள். இதெல்லாம் தான் பாதுகாப்பு ஆயுதங்களா? பாதுகாப்பு! பாதுகாப்பு! இதுதான் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் சொல்லிக் கொள்ளும் முக்கிய சாக்கு. பாதுகாப்பிற்கு தான் பேரழிவு ஆயுதங்களா?

பாதுகாப்பு என்பது எதிரி அழிந்து
நாம் காக்கப்படுவது தான் – மாறாக
எதிரியோடு நாமும் சேர்ந்து அழிவது பாதுகாப்பா?
விசவாயுவுக்கு தெரியுமா எதிரி யார்?
நண்பன் யார்? அப்பாவி யார்? என.

நாட்டுக்கு நாடு தீவிரவாதம், வன்முறை போர், பகை, பொருளாதார சுரண்டல்கள் என பிரிவினைகள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் அணுஆயுதங்கள் எவ்வளவுதூரம் கைகட்டி காத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? போட்டிக்கு போட்டி அணுஆயுதங்களை பெருக்கிக்கொண்டு பகைக்கு பகை பேரழிவுஆயுதங்களை கையில் எடுத்தால் இந்த பூமி தாங்குமா? அத்துனை ஏன் போர், தீவிரவாதம் இதெல்லம் ஒருபுறம் இருக்கட்டும் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதரும் என்ற எரிமலைமீது கோட்டை கட்டிக் கொண்டு வாழ்வது தான் பாதுகாப்பா?

எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?
பாதுகாப்பு பாதுகாப்பு என பேரழிவு பாதாளத்திற்குள் அல்லவா விழுந்து கிடக்கிறோம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்… ( இயேசுவும், அல்லாவும், ராமரும் காப்பாற்றுவார்களா?)

பகுப்புகள்: Uncategorized