அறிவகம்

அக்டோபர் 2008 லிருந்து வரும் பதிவுகள்

காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை – 16)

அக்டோபர் 9, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.

பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.
அறிவின் அளவீடுகள் தான் காலம்.

உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.

இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்

உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, …. இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13… என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.

இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, …. இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 … இப்படி வருகிறது.

காலஅறிவு என்பது அறிவின் இறந்த – நிகழ் – எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும்.

உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.

காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.

காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.

உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம்.

காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.

இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.

இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.

இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை – 15)

அக்டோபர் 5, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்

இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம்.

அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.

இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு இயக்கமாகிறது.

இங்கு மீண்டும் குவாண்டவியலுக்கு போவோம்

எலக்ட்ரான்கள் உட்பட அடிப்படை துகள்கள் கணப்பொழுதில் அலையாகவும் பொருளாகவும் இருக்கும் என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.

இங்கு பொருளாக இருக்கும் துகள் அலையாவதை இயக்கம் என்றும் பொருள் அலையாகி மீண்டும் பொருளாவதை ஒரு கால சுற்று என்றும் குறிப்பிடுகிறோம். இந்த கால சுற்றில் இறுதிக்கும் துவக்கத்துக்குமான தொடர்பு அறிவாகிறது. இடைப்பட்டதற்கான தொடர்பு மாயையாகிறது.

மேற்சொன்ன கருத்தை கம்பியூட்டர் மொழி கணக்கீடில் எளிமையாக புரிந்து கொள்ளலாம் 1 – 0 -1 இது தான் கம்பியூட்டர் மொழி. இதில் 1 பொருள் என்றும் 0 அலை என்றும் உதாரணப்படுத்திக்கொள்ளலாம். இங்கு முந்தை ஒன்றுக்கும் பிந்தைய ஒன்றுக்கும் நேரடி தொடர்ப்பு இருக்கிறது. ஆனால் 0 க்கு இல்லை. உண்மையில் 0 தான் பிந்தைய முந்தைய ஒன்றுகளுக்கு நெருக்கமானது. ஆனால் பிந்தைய ஒன்று அறிவதெல்லாம் முந்தைய ஒன்றை மட்டுமே. இப்படி முந்தைய ஒன்றும் இடைப்பட்ட 0 வாகி பிந்தைய ஒன்றாக மாறுவது ஒரு கால சுற்று. ஆனால் இயக்கம் என்பது இதில் பாதி. முந்தைய ஒன்று 0 ஆனாலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் மீண்டும் 1 வந்தால் மட்டுமே அறிவு வருகிறது. இந்த அறிவின் அளவீடாக காலமும் வருகிறது.

அடுத்த அறிவு கட்டமைப்பை பார்ப்போம்.

1 – 0 – 1 என்ற தொடர்ச்சியின் கட்டமைப்பு 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 இப்படி அமைகிறது. இதை பைனாரி முறை என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது 0+1 = 1, 1 +1 =2, 2+1=3, 3+2=5, 5+3=8, 8+5=13 இப்படி கட்டமைக்கப்படுகிறது. இதில் 1, 0 வும் தான் அனைத்து முழுமையிலுமே இருக்கிறது என்றாலும் 0 இல்லாததாகவே இருக்கிறது. இதை தான் மாயை என்கிறது ஆன்மீகம். அதாவது 5 க்கும் 8 க்கும் இடையில் எண்கள் இல்லாமல் இல்லை ஆனால் பைனாரி கட்டமைப்பில் இல்லாத நிலைதான் அறியப்படுகிறது. அதே போல தான் அறிவும் காலமும் இயக்கமும்.

துகள் அலையானலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் அறிவு முழு சுற்றுகளில் மட்டுமே அறியப்படுகிறது. இந்த முழுச்சுற்றுகளின் அறிவுபடியே காலமும் இருக்கிறது.

ஒரு பொருளின் அடுத்தடுத்த பொருள் நிலைகள் அறிவாகவும் அதன் அளவீடு காலமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் இருக்கும் எதிர்மறைகள் எல்லாம் மா¬யாயாக கொள்ளப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது மாயை இருந்தால் தான் அறிவும் காலமும் இயக்கமும் சாத்தியப்படுகிறது. அறிவும் மாயையும் இந்த இரண்டையும் ஆட்டிப்படைக்கும் மெய்யறிவும் தான் இந்த பிரபஞ்ச திருவிளையாடல்கள். (விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)

ஒவ்வொரு பொருளுக்கும் அது எலக்ட்ரான் ஆனாலும் சரி, ஃபோட்டான் சரி மரம் மனிதனானாலும் சரி அதற்கு இணையான எதிர் அலை இருக்கிறது. அதே போல ஒவ்வொரு அலைக்கும் அது ஒளியானாலும் சரி, மின்காந்த அலையானாலும் சரி அதற்கு இணையான பொருள் இருக்கிறது. இதற்கு அது மாயை அதற்கு இது மாயை அவ்வளவு தான்.

காலசுற்று அடிப்படையில் அறிவு இயக்கம் இருப்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அடுத்து நமது எதார்த்த மாயைகளை கொஞ்சம் அலசிவிட்டு பிரபஞ்ச தோற்றம் குறித்து பார்க்கலாம்

மனிதனுக்குள் மடடுமல்ல பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துனை பொருளுக்குள்ளும் இருக்கக்கூடிய அறிவும் கால அளவீடுகளை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவது. மனிதனுக்கு இருக்கும் அறிவு விலங்குக்கு இருப்பதில்லை. விலங்குக்கு இருக்கும் அறிவு, தாவரத்துக்கு இருப்பதில்ல. தாவரத்துக்கு இருக்கும் அறிவு சட பொருளுக்கு இருப்பதில்லை. மனிதன் முதல் சட பொருள் வரை பிரபஞ்சத்துள் எல்லாம் பொருள் தான். ஆனால் இந்த பொருள்களுக்குள்ளேயே இருக்கும் அறிவு ஏற்றத்தாழ்வுடையது.

பொருளுக்கிடையே மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளேயே அறிவு ஏற்றத்தாழ்வுகள் உடையது தான். மனிதர்களுக்கு எல்லாம் ஒத்த தன்மையுடைய உணர்வு உறுப்புக்களை அறிவு நல்கியிருக்கிறது. அதனால் பேனா எல்லோருக்கும் பேனாவாக தெரிகிறது. ஒரு வேளை ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான அறிவு ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், நான் பேனா என்பதை நீங்கள் தூசு என்பீர்கள், நீங்கள் புழுக்கள் என்பதை நான்நீளமான ராட்சத பாம்புகள் என்பேன். நான் எரும்புகள் என்பதை நீங்கள் யானை கூட்டம் என்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் இறைவன் செய்யவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒத்த அறிவை நல்கியிருக்கிறான். என்றாலும் நுண்ணிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கதான் செய்கிறது.

தீயை தொட்டால் எல்லோருக்கும் சுடுவதால் தீயை வெப்பம் என்கிறோம். ஒரு வேளை நீங்கள் தீயை தொடும்போது விரல் வெப்பத்தை உணராமல் குளிர்வதாக வைத் துக்கொள்ளுங்கள், நானோ தீயை வெப்பம் என்பேன். நீங்களோ குளிர் என்பீர்கள். இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? அதேபோல எனக்கு எலக்ட்ரான் களை மட்டுமே அறியக்கூடிய கண்கள்(விழிகரு) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு பேனாவும் தெரியாது, புத்தகளும் தெரியாது. எல்லாம் எலக்ட்ரான்களாக தான் தெரியும்.

பொருளறிவு என்பது பொருளுக்கு பொருள், இயக்கத்துக்கு இயக்கம், நிலைக்கு நிலை மாறக்கூடியது. எந்தப் பொருளறிவும் நிலையானதோ முழுமையானதோ அல்ல.

இயக்கம் என்பது சார்புடையது. இரு நிலைகளின் சார்பு இன்றி இயக்கம் நிகழாது. அதேபோல தான் இயக்கத்தால் வரும் காலமும் அறிவும் சார்புடையது. காலமும் அறிவும் இருநிலை களையும் வைத்து தீர்மானிக்கப்படுவது. அதில் ஒரு நிலையை மட்டும் அறிந்துகொண்டு அதின் ஏற்றதாழ்வுகளை அறிவாக, காலமாக உணர்வதால் தான் பொருளறிவையும், பொருளறிவில் பொதிந்த பிரபஞ்சத்தையும் மாயை என்கிறது ஆன்மீகம்.

பிரபஞ்சக் கட்டமைப்பு என்பது ஒற்றையறிவாக அறியப்படுவதில்லை. எல்லாம் இரட்டையறிவாக தான் அறியப்படுகிறது. இதை எளிமையாகவே புறிந்து கொள்ளலாம்

அறிநிலை – அறியாநிலை, பரல் – பரவல், துகள் – அலை, பொருள் – வெளி, ஈர்ப்பு – விலக்கு, வெப்பம் – குளிர், நேர் – எதிர், உயர் – உயிரற்றவை, ஆண் – பெண், உள்ளே – வெளியே, மெய் – பொய், என பிரபஞ்சத்தின் அனைத்துமே இரட்டை நிலைகளில் தான் அறியக்கிடக்கிறது. இந்த இரட்டை தன்மைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது மட்டுமல்ல ஒன்றை ஒன்று பொய்யாக்கக் கூடியதும் தான்.

பரலை அறியும் போது பரவல் மறைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரவல் இல்லாமல் பரல் இல்லை என்பதையும் அறிவு அறிகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? என்பதில் தான் பிரபஞ்ச விதிகளுக்கான ரகசியங்கள் அடங்கிக்கிடக்கிறது. ( இது குறித்து விதிகள் பகுதியில பார்க்கலாம்).

வெளி, பொருள் இந்தஇரு அறிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து, அதேநேரத்தில், ஒன்றை ஒன்று அழித்து(மறைத்து) அறியப்படுகிறது.

பொருளறிவின் சார்புநிலையான வெளியறிவை முழுமையாக அறியமால், பொருள் அறிவு அறிந்தவற்றை மட்டும் பிரபஞ்சம், வாழ்க்கை என கூறுவதை தான் ஆன்மீக ஞானிகள் மாயை(பொய்யறிவு) என்கிறார்கள்.

பொருளறிவும் மாயையானது. வெளியறிவும் மாயையானது. இந்தஇரு அறிவுகளையும் சீர்தூக்கிக்பார்க்கும் அறிவே உண்மையான மெய்யறிவு என்கிறது ஆன்மீகம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,