அறிவகம்

அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் (உலகின் அவசரத்தேவை-11)

ஆகஸ்ட் 30, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.

பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘‘பொருள்-வெளி-இயக்கம் என்பவைகள் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள்.

பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், இன்று பெருவாரியான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வது ‘பெரும்வெடிப்பு (bigbang) மற்றும் ‘அடிப்படை துகள்பிணைப்பு’ கொள்கைகளைத் தான்.

‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள்திணிவு பந்திலிருந்து(bigbang) வெடித்துசிதறி பறந்து விரிந்தது தான் இந்த பிரபஞ்சப்பொருட்களும் இயக்கங்களும்’’ என சிலவிஞ்ஞானிகளும், ‘‘பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்ச அடிப்படை துகள்களின் ‘பரஸ்பர ஈர்ப்பு – விலக்கு’ விசைகளினால் உறுவானதே இந்த பிரபஞ்சத்தோற்றம்’’ என சில விஞ்ஞானிகளும் விளக்குகின்றனர். மொத்தத்தில் ‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள் எனும் மூலத்தின் பரிமாற்றங்களும் பரிணாமங்களுமே இப்பிரபஞ்சத்தோற்றம்’’என்பது அறிவியல்துறையின் ஒட்டுமொத்த விளக்கம்.

பிரபஞ்ச அடிப்படைபொருள் எது? அது எப்படிஉருவானது? அதன்இயக்கம் என்ன? இயக்க காரண காரியம் என்ன? இவைகளை கண்டுபிடித்துவிட்டால் பிரபஞ்ச ரகசியங்களையெல்லாம் விளக்கிக்கொள்ளலாம் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.

பிரபஞ்ச அடிப்படை பொருள் எது? என்பதை கண்டுபிடிக்க பொருளை பிரித்துத் பிரித்து மூலக்கூறு, அணு, அணுத்துகள்கள், குவாண்டங்கள், போட்டான்கள் என பல நுணுக்கங்களை கண்டுபிடித்திக்கிறார்கள்.

அணுத்துகள்களுக்கு கீழ்நிலையான குவாண்டங்களைப் பற்றி புரிந்துகொள்வது கடினம். எளிமையாகச் சொன்னால் குவாண்டகளை ‘ஒளித்துகள்கள்’ எனலாம். ஆனால் அதை முழுமையான விளக்கம் என்றிட முடியாது.

ஒளி என்பது ஒத்த கணத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கலாம் என்பது ஒளிதன் அடிப்படை தத்துவம். ஒளியை துகளா அலையா எனநிர்ணயிப்பது கடினம். ஒளியானது துகளாகவும் இருக்கலாம் அலையாகவும் இருக்கலாம் – அது அறியப்படும் அல்லது அளக்கப்படும் கருவிகளைப் பொருத்தது என குவாண்டவியல் இறுதி வரையறை தருகிறது.

பொருளைப் பிரித்தால் அணுக்கள். அணுவைப்பிரித்தால் அணுத்துகள்கள். அணுத்துகளை நுணுக்கினால் குவாண்டங்கள். குவாண்டங்களுக்கீழ் என்ன இருக்கிறது? இதை கருவிகளைக் கொண்டு அறியமுடியாது என்பதை குவாண்டவியல் அறிஞர்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்!

கருவிக்கு கருவி குவாண்டங்களின் தன்மைகள் நிச்சயமற்ற நிலையில் மாறுபடுகின்றன. நிலையை நிச்சயிக்காமல் அதுகுறித்த ஆய்வை அல்லது அறிவை பெறமுடியாது என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது.

‘அறியப்படும் அறிவைப்(கருவியை) பொருத்தே ஒளியின் தன்மை’ என்ற தத்துவம் புரிந்துபோன விஞ்ஞானிகளுக்கு ‘ஒளியின் நிச்சயமில்லாத் தன்மைகளைத் தாண்டி அறிவியல் அறிவை செலுத்தமுடியாது’ என்பதுவே இன்றுவரை கிடைத்திருக்கும் தீர்க்கமான பதில். பொருள் அறிவியலால் ஒளிவரை மட்டுமே பயணிக்கமுடியும். அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம். இதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பொருள் அறிவியல் என்றால் என்ன? அதற்கு அப்பாற்பட்டஅறிவு என்பது என்ன? அது ஏன் அவசியமாகிறது? இதற்கான விளக்கங்களை புரிந்துகொண்டு தொடர்ந்து பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வோம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்… ( பொருள், வெளி, இயக்கம், காலம் குறித்த விளக்கங்கள்., காலம் எப்படி அறிவியலாளர்களை முட்டாளாக்குகிறது.)

இந்த கட்டுரை தொடரை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். உலகின் அவரசத்தேவை, உலக பேரழிவு காரணங்கள், பிரபஞ்ச தோற்றமும் இயக்கமும், மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும், மனிதகுல அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சனைகள், புதிய யுகத்திற்கான தொலைநோக்கு, என்ற தலைப்புகளில் அடுத்தடுத்த பதிப்புகள் இருக்கும். வலைப்பூ வாசகர்களின் வரவேற்பை பொருத்து தொடர்ந்து வலைபூவிலேயே எழுதலாமா அல்லது பத்திரிக்கைகளிலும் எழுதலாமா, புத்தகமாக வெளியிடலாமா என்ற முடிவு எடுக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு arivakam@gmail.com

→ Leave a Commentபகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , , , , ,

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)

ஆகஸ்ட் 29, 2008 · 1 மறுமொழி

அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்

பிரபஞ்சம் என்றால் என்ன?

பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்காலமும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். சுருக்கமாக காலம் தான் பிரபஞ்சம் எனலாம். பேரரிஞர் ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தை ஒரு கால வெளியாகவே குறிப்பிடுகிறார். இது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்த பதிப்பில் எளிமையாகவே சொல்கிறோம்.( இங்கு சொன்னால் பதிப்பு பக்கம் நீண்டுவிடும். மற்ற கேள்விகளை பார்க்க முடியாது)

ஆன்மீகம் என்றால் என்ன?

காலத்தை ஆளுகை செய்யும் அறிவு தான் ஆன்மீகம். அது தான் கடவுளும். இது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. இதை கதையாகவோ உதாரணங்களாகவோ சொன்னால் யாருக்கும் புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் அறிவியல் ரீதியான நிரூபணங்களுடன் அடுத்தடுத்த பதிப்பில் விளக்கி சொல்கிறேன். முதலில் அறிவியலையும் பிரபஞ்சத்தையும் தெளிவாக புரிந்து கொள்வோம். அப்போது தான் ஆன்மீகத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

அறிவியல் என்பது என்ன?

அறிவியல் என்பது ஒரு பொருளை(கருவியை) மையமாக வைத்து பிரபஞ்சத்தை ஆய்வது. ஆனால் பிரபஞ்சம் எனபது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் தெளிவாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனுக்கு முன்பு விண்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். அதனால் விண்வெளியில் இருந்து வரும் ஒளியை கடத்த ஈதர் என்ற கற்பனை துகளை பயன்படுத்தினார்கள். பின்னர் அது மின்காந்த அலைகள் என பெயர் மாற்றபட்டு விட்டது.

உண்மையில் இரண்டு பொருட்களுக்கு இடைபட்ட வெளியில் என்ன இருக்கிறது என்பது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு கேள்விகுறி தான். இந்த இடத்தில் தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தை அறிவியலோடு பொருத்தும் போது எல்லமே பொய்யாகிவிடுகிறது. அதாவது இதுவரை விஞ்ஞானிகள் கணித்து வைத்துள்ள எல்லாமே பொய்யாகிறது. இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வானியால் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளது எல்லாம் கணிப்புகளே அல்லாமல் முழுமையான நிரூபணங்கள் அல்ல. மறுப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்புகள் இவை.

பல கணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு விஞ்ஞானியின் கருத்தை இன்னொரு விஞ்ஞானி ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் பெரிது படுத்தபபடாமையால் யாருக்கும் அறிவியல் மீது சந்தேகம் வருவதில்லை.

சுருக்கமாக அறிவியல் என்பது பொருள் சார்ந்தது. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் மறுப்பதில்லை. பொருளுக்கு அப்பாற்பட்டதை அறிவியலால் மட்டுமே விளக்க முடியாது.

மதத்துக்கும் ஆன்மீகத்துக்கம் உள்ள சம்மந்தம் என்ன?

முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.

கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.

பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.
(இது குறித்த விரிவான விளக்கங்கள் கட்டுரை போக்கிலேயே பார்க்கலாம்)

அறிவகம் சொல்ல வருவது என்ன?

இன்றைய மனிதகுலத்தின் அவசரத்தேவை மற்றும் அடிப்படை தேவைகளை உலகில் சாத்தியப்படுத்த வேண்டும். சமாதானமும் சமத்துவமும் தவழும் புதிய யுகம் படைக்க வேண்டும். இதை நோக்கிய ஒரு முயற்சிதான் அறிவகம்.

இந்த இலக்குக்கும் ஆன்மீகம்-அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?

இன்று மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரட்சனைகளுக்கும் ஆன்மீகம் தான் காரணம். மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமை தான். ஆன்மீகத்தை சரியா புரிந்து கொள்ளும் போது மதம், கடவுள், மரணம், சொர்க்கம், கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரட்சணைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காண முடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.

மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சணைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும். அறிவகத்தின் இலக்கு நிறைவேற வழி பிறந்துவிடும்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்… ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

→ 1 மறுமொழிபகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , , , , ,

அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை – 9)

ஆகஸ்ட் 13, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?

ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.

அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்

மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மூடம் என நாத்திகம் பேசுவது முட்டாள்தனம். பிரபஞ்ச அறியாமைகளை அகற்றிக்கொள்ள மனிதனுக்கு அறிவியல் ஆன்மீகம் என இரண்டுமே தேவைதான்.

(உதாரணம்: சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்.- இது உதாரணம் மட்டுமே ஆன்மீகத்தின் முழுமையான விளக்கம் அல்ல.)

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா?
பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா?

இந்த கேள்வியை திரும்பத்திரும்ப ஆராய்ந்த ஆதிகால ஆன்மீகஞானிகளும், சித்தர்களும் தெளிவாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதை காட்டிலும், பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது தான் எக்காலத்துக்கும் சிறந்தது. ஆனாலும் நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப வலியுருத்தியுள்ளனர்.

ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியலே அல்லாமல், அறிவியலின் எதிர்வாதமோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கையோ அல்ல. உண்மையில் ஆன்மீக ஞானிகள் சொல்லிய சித்தாந்தங்களும் வேதங்களும் தான் அறிவியலின் அடித்தளங்கள். கட்டுப்பாடுள்ள அறிவியல் – இதுதான் வேதாந்த ஆன்மீகத்தின் அடிப்படை கோள்கை.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைக்கும் அறிவியல் ஒரு கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கட்டுப்பாட்டை மீறுமானால் அது நம்மையே அழித்துவிடும். இப்படி கட்டுப்பாடுகளை சொன்ன ஆன்மீகத்தை ஒதுக்கியது, ஒதுக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இன்று அறியாமைகள், பிரட்சனைகள், வன்முறைகள், அணுஆயுதப் பேரழிவுகள் என நாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க காரணமே ஆன்மீக கட்டுப்பாடுகளை தாண்டி விரிந்த அறிவியலால் தான்.

பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைப்பதும், அதற்கு ஏற்றவாறு நாம் வளைவதும் கால சூழலை பொருத்தது. இத்தகு சூழலில் சரியானதை தேர்ந்தெடுக்கும் போது அறியாமை அகன்று அறிவுத்தெளிவு பிறக்கிறது. இது ஆன்மீகம் வகுத்த வேதாந்த கோட்பாடு. ஆனால் சோம்பேரிதனமும் பேராசைகளும் நிறைந்த மனிதர்கள் ஆன்மீகவிதிகளை அடியோடு ஒதுக்கினர். அறிவியல், அறிவியில் என்று இயன்றவரை பிரபஞ்சத்தை வளைத்து மனதுக்குள் வசியப்படுத்திக் கொண்டர்னர்.

விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாக நம்பியவன் மெய்ஞானத்தை அடியோடு மறந்து விட்டான். விளைவு இன்று பொருள் அறிவியலின் மாயைகளுக்குள் விழுந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறான். அறிவியலே கடவுள். அதுவே எல்லாமும். அதன் பார்வை மட்டுமே உண்மை. என்று அறிவியலை முழுமையாக நம்பி, ஆன்மீக கண்களை குருடாக்கிக் கொண்ட நமக்கு விதிக்கப்பட்ட சாபம் தான் இன்றைய அறியாமை அவலங்கள்.

இன்று மனிதன் கடவுளுக்காக கூட அடித்துக்கொள்கிறான். எவ்வளவு பெறிய அவலம்?
கடவுள் யார்? இதுதான் இன்றைய மனிதனின் மிகப்பெறிய அறியாமை.

அறிவியில் மோகத்தில் முற்றிப்போன நாம் விதிப்படி தேடிக்கொண்ட விஷம் தான் இன்றைய அறியாமைகள் என ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அறிவியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது மனங்களுக்கு இந்த விதிவிளக்கம் புரியாது. இதற்குமேலும் இப்படி ஆன்மீக சிந்தனைகளையே நான் பேசினால், இவளும் ஒரு குழப்பவாதி என முடிவு செய்து, இந்த வலைபூவை சுருட்டி மூலையில் வீசிவிட்டு போய் விடுவீர்கள்.

ஆம்! இன்று அறிவியலை குற்றமோ குறையோ சொன்னால் யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் மனித மனங்கள் அந்த அளவுக்கு அறிவியலுக்கு அடிமையாகி விட்டன. இன்று மனித மனங்களில் எல்லாம் அறிவியலே குடிகொண்டுள்ளது. எதை சொன்னாலும் அறிவியல் ரீதியில் உபகரண உதாரணங்களோடு சொன்னால் தான் புரியும். அறிவியல் இன்றி ஆன்மீக சிந்தனைகளில் எதையும் சொல்ல முடியாது.

உண்மையில் எண்ணயியலை(ஆன்மீகம்) போதிக்க தான் எண்ணியலை(அறிவியல்) கொண்டுவந்தார்கள் ஆன்மீகஞானிகள். ஆனால் இன்று எண்ணயியலை விட்டுவிட்டு எண்ணியல் தான் எல்லாமும் என குதிக்கின்றோம். உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொண்டோம்.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ஒவ்வொரு மனித மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றது. ஆனால் அறிவியலின் மாயையுள் புதைந்து விட்ட நமது மனங்களுக்கு எப்படி ஆன்மீகத்தை புரிய வைப்பது?

ஆன்மீகத்தை மனதுக்கு புரியவைக்க நமது மனங்கள் அடிமைபட்டுள்ள அறிவியல் வழியையே கையாளலாம். அப்போது தான் உங்களுக்கும் எனக்கும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மட்டுமல்ல இரட்டை அர்த்தங்களால் மேலும் மேலும் அறியாமைகள் பெருகாமல் தவிர்க்க முடியும்.

இயேசு கிறிஸ்து, நபிகளார், கிருஷ்ணர் உட்பட இன்னும் பல ஆன்மீக மகான்கள் செய்த தவறு இதுதான். மக்களுக்கு புரியவைப்பதற்காக உதாரணஉவமை நடையில் ஆன்மீகத்தை போதித்தார்கள். பின்னர் அதுவே இரட்டை அர்த்தங்களாக்கப்பட்டு இன்று அறியாமைகளின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது மனிதனை. முத்தாய்ப்பாய் சொன்னால் இன்று அறிவியலை விட ஆன்மீகத்தில் தான் அறியாமைகள் புரையோடிக்கிடக்கின்றன.

புரிதலும் சிந்தனைகளும் தெளிவாக இருக்கவேண்டும். மனம்அதை நேரடியாக உணரக் கூடிய எதார்த்த போதனைகளாக இருக்க வேண்டும். அறிவியலால் ஆக்கிரமிக்கப்படடுள்ள நமது மனங்களுக்கு அறிவியல் வழியில் தான் எதையும் நேரடியாக விளக்கிக்கொள்ள முடியும். அது அல்லாமல் வேறு எந்த வழியில் முயன்றாலும் இரட்டை அர்த்தங்களும் அதனால் விளையும் அறியாமைகளும் தான் தொடரும்.

பொருள் அறிவியலால் விளைந்த போகவாழ்க்கையின் மாயத்திரையை கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை எதார்த்தமாகவே உணரலாம்.

அந்த உன்னத அறிவை சந்திக்க தொடர்வோம்….

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்… ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது? பூமி சுற்றுவது உண்மையா? கடவுள் யார்? மரணத்துக்கு முன்னும்பின்னும் மனித வாழ்க்கையின் உண்மை தான் என்ன?)

அறிவகம் என்பது வெறும் ஒருசார் கருத்துக்கள் அல்ல. இதில் உலகளாவிய சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம். மாற்றுகருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் தொடர்ந்து படிக்கிறோம் என்பதையாவது பின்னூட்டம் comments மூலம் தெரியப்படுத்தலாமே…

→ Leave a Commentபகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , , ,

நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)

ஆகஸ்ட் 8, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?

எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!

தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரட்சனைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக ஒன்று திரள மறுக்கிறார்கள். அறியாமையால் தான் வாழ்நாள் முழுவதும் காட்டிலும் பாலைவனத்திலும் அலைந்து திரிந்து, சாகும்போது கூட சபிக்கப்பட்டவர்களாய் சாகிறார்கள் தீவிரவாதிகள்.

அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம்.

எது சரி? எது தவறு? எனக்கு சரி என படுவது மற்றவனுக்கு தவறாக படுகிறது. மற்றவனுக்கு சரியாகப்படுவது எனக்கு தவறாகபடுகிறது. இப்படியிருக்கும் இந்த யுகத்தில் எப்படி பிரட்சனைகளை சரி, தவறு என தீர்மானிப்பது. அழிவை விரும்பாத ஒவ்வொரு மனங்களும் கேட்கும் கேள்விகள் இவை.

தர்மத்தின் வாழ்வுதனை ஏன் சூது கவ்வ வேண்டும்? – இது ஒவ்வொரு எதார்த்த மனங்களிலும் இருக்கும் உச்ச கேள்வி.

முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மரணத்தை தாண்டியும், வாழ்க்கை விதிகளை வகுத்துவைத்துள்ள ஆன்மீகவாதிகளின் அடக்குமுறை ஒருபுறம். பிரபஞ்சம், பால்வெளி, பெரும்வெடிப்பு, சூரியன் அழியும், பூமி பிரளும் என புதுப்புது அர்த்தங்களை கூறும் அறிவியலின் அச்சுருத்தல் ஒருபுறம். ஆன்மீகமும் அறிவியலும் என்னென்னமோ சொன்னாலும் எதார்த்தத்திற்கும் நடைமுறை அரசியலுக்குமுள்ள தடுமாற்றங்கள் மறுபுறம். இத்தனை அறியாமைகளும் ஒன்றுசேர்ந்து நெருக்கும்போது எப்படி மனிதமனதுள் பொறுப்புணர்ச்சி வரும்?

கடவுள் இருக்கிறாரா? என்னை கண்காணிக்கிறாரா? புனிதயுத்தம் கடவுளின் கட்டளையா? தர்மயுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது குற்றமா? அல்லது ஈடுபடுவது குற்றமா? வேதங்கள் தான் வாழ்க்கையின் நிர்ணயிககப்பட்ட சட்டங்களா? இயேசு கிறிஸ்துவா, அல்லாவா, இந்துத்துவ கடவுள்களா? அல்லது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவரா?

யார் கடவுள், எந்த சக்தி கடவுளின் விதி? எது கடவுளின் வழி? அல்லது கடவுளே இல்லையா? எதை நான் பின்பற்றுவது? எது பாவம்? எது புண்ணியம்? இந்த உலகம் அழிவுக்காக படைக்கப் பட்டதா? இந்த உலகை தாண்டிய சொர்க்கலோகம் உண்டா? பிரபஞ்சம் வெடித்து சிதறிவிடுமா? நிச்சயமற்ற இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்வரை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டால் தான் என்ன? – இப்படி மனதுக்குள் தெளிவு இல்லாத மக்களுக்கு எப்படி, அலட்சியம் அகன்று விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் வரும்?

அறியாமைகள் அகன்று அறிவுத்தெளிவு வராதவரை நல்லெண்ணவாத மக்கள் பொது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள். மதத்தின் பேரில் பிரச்சனையா அதை பற்றி எனக்கு தெரியாது, எனவே அதை தடுக்கவோ தீர்க்கவோ நான் முயல்வது சரிப்பட்டு வராது. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு பிரட்சனைகளிலும் நல்லெண்ணவாத மக்கள் ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள்.

விளைவு என்ன?

அநீதிகளும், சுயநலபோகங்களும் அசுரவேகத்தில் பெருகி, இன்று உலகே பேரழிவுக் கிடங்காகிக் கிடக்கிறது. அறியாமைகள் அகல வேண்டும் அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். அறியாமைகள் அகலாமல் மனித குலத்தின் எந்த பிரச்சனைகளும் தீராது. தீர்க்கவும் முடியாது. முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரட்சனைகளை தீர்க்க முடியாது.

சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரட்சனைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?

எதனால் இந்த கொடூரம் நிகழ்ந்தது?

அவர்கள் நல்லதை விதைக்க ஏன் பலமடங்கு தீமைகள் விளைந்தது? மனித குலத்துள் பிரட்சனைகள் உதித்த காலம் தொட்டு தீர்வுகள் சொல்லிச்சொல்லி தலைமுறை தோறும் ஞானிகளும், மகான்களும் உதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இத்துனை மகான்களும் ஞானிகளும் போதித்தும் மனிதகுல பிரட்சனைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

மனிதகுல பிரட்சனைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலவே அகலாதா? அறியாமைகள் அகன்று அலட்சியப் போக்கு மாறி, பிரட்சனைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும், புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? – இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.

எதார்த்த சிந்தனையோடேயே தொடர்ந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் அறியாமைகளுக்கும், பிரட்சனைகளுக்கும், முற்றுபுள்ளி வைக்கலாம் அல்லவா? உங்கள் சிந்தனைகளை அறிவகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்… arivakam@gmail.com

தொடர்ச்சி., அடுத்த பதிப்பில்… (அறிவியலா ஆன்மீகமா?., பிரபஞ்ச தோற்ற இயக்க உண்மை தான் என்ன?)

→ Leave a Commentபகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , , , , , ,

யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?(உலகின் அவசரத்தேவை-7)

ஆகஸ்ட் 1, 2008 · 1 மறுமொழி

சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?

தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் பதிந்திருக்கும். இன்று உலகின் பெரும் பான்மை நாடுகளில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களின் முதன்மை பிரதிநிதிகள் தான் இந்த அரசியல்வாதிகள். அப்படியானால் இத்தகு அரசியல்வாதிகள் உருவாக முக்கிய காரண கர்த்தாக்கள் மக்கள் தானே.

ஆம்! அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த செயல்களை சரி & தவறு எனறு பிரித்து கூட பார்க்காமல், எல்லாவற்றிற்கும் ஆமாம் போடும் பொறுப்புணர்ச்சியற்ற மக்கள் தான் சுயநலபோக அரசியல்வாதிகள் வளர காரணமானவர்கள்.

நான் தற்போதைக்கு பாதிக்கப்படுவதில்லை. எது எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? யார் எத்தகு ஆயுதங்களை பெருக்கிக்கொண்டால் எனக்கு என்ன? நான் மட்டும் பாதிக்கப்படுவதில்லையே?, அதுமட்டுமல்ல அணுஆயுதம், போர் இதெல்லாம் அணுவிஞ்ஞானிகள், ராணுவம், சம்மந்தப்பட்டது. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத ஒன்றில் என் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை. அது பற்றிய அக்கரையும் எனக்கு இல்லை. அப்படியே அக்கரை எடுத்துக்கொண்டாலும் அதில் தலையிட எனக்கு நேரமில்லை. என் பிரட்சனைகளை பார்க்கவே எனக்கு நேரமில்லை. பின் எப்படி நான் சர்வதேச பிரட்சனைகளை பார்ப்பது? என்றாவது உலகம் அழியக்கூடுமானால் அழியட்டும். உலகோடு நானும் அழிந்துபோகிறேன் அவ்வளவு தான். இப்போதைக்கு என் சுயப்பிரட்சனைகளை மட்டும் பார்க்கிறேன். பொது பிரட்சனைகள் அதன் போக்கிற்கே போகட்டும். இப்படி அவரவர் போக்குக்குப் போகும் விழிப்புணர்வும், பொறுப்புணர்ச்சியும் இல்லாத மக்கள் தான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாக்கள்.

சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நல்லெண்ணவாதிகள் ஒதுங்குவதுதான் சுயநல போக அரசியல்வாதிகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணம்.

இன்று உலகே பேரழிவுக் கிடங்காகி அழிவின் விளிம்பில் நிற்கிறது என்றால் மக்களாட்சியில் ஓட்டளித்து மதிகெட்ட அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்த மக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள்.

உலகில் பெரும்பான்மை மக்களிடம் சமாதான எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதாது, அதை சமுதாயத்தில் செயல்படுத்திக் காட்டும் அணுகுமுறை ஆற்றல் இருக்க வேண்டும்.

அரசியலை நிர்ணயித்து அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் அறிவு மடடும் இருந்தால் போதாது; அரசியல் குறித்த விழிப்புணர்வும், அரசியல்வாதிகளை காண்காணிக்கும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது; சமுதாயத்தில் நடக்கும் சுரண்டல்களையும், அதிகார அத்துமீரல்களையும் தட்டிக் கேட்டு எதிர்த்து போராடும் துணிச்சல் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொலை நோக்குபார்வையும் அதை எப்போதும் நடைமுறை வாழ்வில் நிலைநிறுத்தும் கடமை உணர்வும் மக்கள் மனங்களில் இருக்க வேண்டும்.

மேற்சொன்ன எதுவுமே இன்றைய மக்களிடம் இல்லாததால் தான் பேரழிவு ஆயுதங்கள் உட்பட இத்தனை அவலங்களும் அரங்கேறிக்கிடக்கிறது.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்…. ( ஏன் இந்த அலட்சியம்?, நபிகளும் இயேசுவும் கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)
உங்கள் கருத்துக்களை அறிவகத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்…. arivakam@gmail.com

→ 1 மறுமொழிபகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: ,